மதுரை பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 17- வது ஆண்டு விளையாட்டு விழா, நடைபெற்றது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரும், தயான் சந்த் விருது பெற்றவருமான ரஞ்ஜித் குமார் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளித் தலைவர் டாக்டர் திருசெந்தூரன், தாளாளர் டாக்டர் திருப்பதி மற்றும் நிறுவனர் பத்மா ராமசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர்.
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்தனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.’ஆகாஷ் ஹவுஸ்’ அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று, இவ்விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்தது.