கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி செயல்பட்டு வரும் ரேவா சங்கத்தினரின் ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி ஓய்வூதிய தாரர்களுக்கு டி.ஏ.உயர்வு மற்றும் அரியர்ஸ் வழங்க வேண்டி ரேவா சங்க மாநில நிர்வாகிகள் முன்னாள் ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டும் நிறைவேறாத நிலையில் ஓய்வூதியதாரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்ததாகவும் இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் கவனத்திற்கு ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் எடுத்துச்சென்று தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அகவிலைப்படி உள்ளிட்ட பணப்பலன்களான சுமார் 10 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த தமிழக அரசுக்கும் தொடர் முயற்சியால் தீர்வு காண துணை புரிந்த ரேவா சங்க மாநில நிர்வாகிகளுக்கும் நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

வால்பாறை கிளை சங்கத்தின் தலைவர் நாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயலாளர் பிரேம் குமார், பொருளாளர் கருணாநிதி, துணைத்தலைவர்கள் சந்திரன், கல்யாணராஜ், ராமன் துணைச்செயலாளர்கள் தங்கராஜ்,ஜெபக்கனி, செல்வக்குமார், சின்னச்சாமி, மத்திய சங்க நிர்வாகிகள் சின்னப்பன் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
11.09.2026

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *