காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வாலை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் சோனாலி மிஸ்ரா, மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பது, உளவுத்தகவல் பகிர்வு மற்றும் ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்ட்டது.
இதுபோன்ற குற்றங்களைத் திறம்படத் தடுக்கவும் எதிர்கொள்ளவும், இரு அமைப்பு களுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு டன் உரிய நேரத் தில் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.