ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிடிரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு வழங்கிய பாஜக மாவட்ட தலைவர் சி.சரவணன்
பொம்மிடிசுற்று வட்டாரபொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று, பாஜக மாவட்டத் தலைவர் சி. சரவணன் நடவடிக்கை.
பொம்மிடி ரயில் நிலையத்தில் முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று, தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் உயர்திரு சி. சரவணன் அவர்கள் நேரடியாக டெல்லி சென்று, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், பொம்மிடி ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட முக்கிய ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:
12675/12676 – கோவை எக்ஸ்பிரஸ்
16315/16316 – மைசூர் எக்ஸ்பிரஸ்
16339/16340 – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
பொம்மிடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாக, மேற்கண்ட ரயில்களுக்கு பொம்மிடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் கோரிக்கையை நேரில் எடுத்துச் சென்று, டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மாவட்டத் தலைவர் உயர்திரு சி. சரவணன் அவர்களுக்கு பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர் .