கோவை , செப். 15:

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மையமாகக் கொண்டு, எலக்ட்ரானிகா இந்தியா மற்றும் புரொடக்ட்ரோனிகா இந்தியா 2026 கண்காட்சிகள் செப்டம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை பெங்களூரில் உள்ள Bangalore International Exhibition Centre (BIEC)-ல் நடைபெறுகின்றன. Messe Muenchen India, Messe München Group-ன் ஒரு பகுதியாக, இக்கண்காட்சிகளை நடத்துகிறது.

‘எலக்ட்ரானிக்ஸில் இந்தியாவின் பவர்ப்ளே’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சுமார் 60,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்த நிகழ்வில், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50,000-க்கும் அதிகமான வணிக பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 18 மாநாடுகள், உச்சிமாநாடுகள் மற்றும் தொழில்துறை மன்றங்களில் 150-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் PLI திட்டங்கள் மற்றும் Electronics Components Manufacturing Scheme (ECMS) முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ஆகஸ்ட் 17, 2026 நிலவரப்படி, ECMS கீழ் 106 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ₹69,548 கோடி முதலீடு மற்றும் 74,628 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 38 ஆலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது.

இக்கண்காட்சிகள் மூலம் உற்பத்தியாளர்கள், கூறு சப்ளையர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே தளத்தில் இணைந்து புதிய தொழில்நுட்பங்கள், sourcing வாய்ப்புகள் மற்றும் வணிக கூட்டாண்மைகளை ஆராய முடியும். கர்நாடக அரசின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *