செய்தியாளர் வெங்கடேசன்
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.கழகம் சார்பில், தமிழ்த்தாயின் தலைமகன் – பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், வடிவேலு தலைமையிலும், நெமிலி பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நெமிலி அண்ணா சாலையில் அமைதி ஊர்வலமாகச் சென்று, நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய துணைச் செயலாளர் முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அரிகிருஷ்ணன், நெமிலி பேரூர் நிர்வாகிகள் சேகர், கோபி, ஹரிஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தனர்.