கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த திம்மபுரம் கிராமத்தில் அமரன் பிரதர்ஸ் சார்பில் எட்டாம் ஆண்டு மாபெரும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை விநாயகருக்கு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து அமரன் பிரதர்ஸ் சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும், விழாவையொட்டி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.