கோவையில் சிருஷ்டி 2026 கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் தமிழ்நாடு கைவினைக் கழகம் சார்பில் நடத்தப்படும் ‘சிருஷ்டி 2026’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் பாரம்பரிய கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் புடவைகள், ஜவுளிப் பொருட்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், விலைமதிப்புள்ள மற்றும் விலைமதிப்பற்ற நகைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் சுமார் 60 க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு உணவு வகைகளுடன் உணவு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.

‘சிருஷ்டி’ விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், கோவையில் ஆண்டுதோறும் நடைபெறும் கைவினைப் பொருட்கள் சந்தையில் பங்கேற்கும் கைவினைஞர்களுக்கான செலவுகளுக்கு மானியமாக பயன்படுத்தப்படுவதாகவும்,
இந்த கைவினைப் பொருட்கள் சந்தை மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கைவினைஞர்கள் தங்களது பாரம்பரிய கைவினைப் பொருட்களை பொதுமக்களிடம் நேரடியாக காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான வாய்ப்பை பெறுவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

தீபாவளியை முன்னிட்டு ஒரே இடத்தில் பாரம்பரிய கைவினை மற்றும் கைத்தறி பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளி்ல் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *