சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணவனுடன் வந்து வழி தவறி விம்கோ நகர் ரயில் நிலையம் வந்த தாய் மற்றும் ஆறு வயது குழந்தையை பத்திரமாக மீட்டு கணவரிடம் ஒப்படைத்த எண்ணூர் காவல்துறையினர்

அசாம் மாநிலத்தில் வசித்து பெங்களூரில் பணி செய்து வரும் தாமோதர் புஷ் இவர் மனைவி பெயர் பல்லபி (26)மற்றும் குழந்தையுடன் மூன்று பேரும் பெங்களூருக்கு தனது சகோதரரை பார்ப்பதற்காக ரயில் மூலம் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தபோது தாயும் குழந்தையும் மட்டும் புறநகர் ரயிலில் தவறுதலாக ஏறி விம்கோ நகர் ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் குழந்தையுடன் பெண் ஒருவர் சுற்றித் திரிவதை கண்ட எண்ணூர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பிரேம்நாத் மற்றும் காவல் ஆய்வாளர் உமாதேவி அவர்கள் தலைமையில் தாய் மற்றும் குழந்தையை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததை யடுத்து அவர்களிடம் கணவருடைய தொலைபேசி எண்ணை வாங்கி பின்னர் அவர் கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இங்கு எண்ணூர் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு அவரிடம் ஒப்படைத்தனர் இரவு நேரத்தில் பெண் என்பதால் பெண்களுக்கு காப்பகத்தில் தங்க வைத்து பத்திரமாக கணவனிடம் ஒப்படைத்த காவல்துறையினர பாராட்டினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *