கோவை:
கோவை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில், ‘Dubai Miracle Garden’ என்ற பெயரில் பிரமாண்ட மலர் மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சி கோலாகலமாகத் துவங்கியுள்ளது. இக்கண்காட்சியை மாண்புமிகு அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தனர்.

கண்காட்சி வளாகத்திற்குள் நுழையும் பார்வையாளர்களை பிரமாண்டமான ‘கரீபியன் கப்பல்’ வரவேற்கும் நிலையில், பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் ‘வோர்டெக்ஸ் டனல்’ (Vortex Tunnel) உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செயற்கை மலர் கண்காட்சியும், குழந்தைகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட சோட்டா பீம், புஜ்ஜி, டோரா போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பிரமாண்ட சிலைகளும் சிறுவர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகின்றன.

மேலும், ஸ்னோ வேர்ல்ட் (Snow World), கோஸ்ட் ஹவுஸ் (Ghost House), 9D சினிமா, கிட்ஸ் வேர்ல்ட் ஆகிய சிறப்பு அரங்குகளுடன், சாகச விரும்பிகளுக்காக ராட்டினங்கள் (Giant Wheel) உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் சாகச விளையாட்டுகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. இவற்றுடன், பொருட்களின் விற்பனைக் கடைகள் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த ஃபூட் கோர்ட் (Food Court) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளதால், பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் உணவு அனுபவங்களை ஒரே இடத்தில் பெற்று கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பொருட்காட்சி நிர்வாகிகள் இஸ்மாயில், அபுதாஹிர் RM, ரபி, ஏர்டெல் அபுதாகிர், ஜியா, கபூர் மற்றும் ஹரி பாஸ்கர் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *