தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் முதியோர்களை போற்றும் வகையில் அவர்களது முன்னிலையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டும் சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பித்திடும் வகையில் அனைவருக்கும் கைத்தறி ஆடை அணிந்து வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் முதியோர்கள் அனைவரும் உடல் நலத்துடன் நலமாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சக்தி சதன் பெண்கள் காப்பகத்தில் பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்ததுடன் காப்பகத்தில் உள்ள முதியோர்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணு பிரியா சக்தி சதன் பெண்கள் காப்பக கண்காணிப்பாளர் சந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்