தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் சோழமண்டல சிவாஜி பாசறை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தஞ்சை மணிமண்டபம் அருகிலுள்ள சிவாஜிகணேசன் உருவ சிலைக்கு சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா. வெங்கட்ராமன் தலைமையில் பரிசுத்தம் கல்லூரி தாளாளர் எஸ்.பி.அந்தோணிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அப்போது தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு சிவாஜி கணேசன் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், தஞ்சாவூர் மத்திய மாவட்டம் தவெக சார்பில் டாக்டர் தங்கக் கண்ணன், எல்.பி.ஆர் பாலாஜி, பிரேம், துரை சுரேஷ், ராஜ் கமல் கே.என்.ஏ முத்துராமன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.