தென்காசி மாவட்டம் சுரண்டையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும், ஆலங்குளம், சுரண்டை பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டியும், ஆலங்குளத்தில் தொடங்கி கைவிடப்பட்ட சர்க்கரை ஆலையை தொடங்க ஏற்பாடு செய்யவும், வனவிலங்குகள் மான், பன்றி போன்ற மிருகங்கள் விவசாய விளை பொருள்களை அழித்து நாசம் செய்வதை தடுக்க வேண்டியும், ஆலங்குளம் முதல் சுரண்டை வரை பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி பிரச்சாரம் செய்து மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து படிவங்களை வழங்கிட தெருமுனை பிரச்சாரம் நடந்தது
பிரச்சாரத்திற்கு ஆலங்குளம் தொகுதி செயலாளர் கதிரேசன் தலைமை வகித்தார் சுரண்டை நகர செயலாளர் வேலுச்சாமி ஆலங்குளம் நகர செயலாளர். முருகன், சுரண்டை நகர துணை செயலாளர் முத்துசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநிலச் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாநில குழு உறுப்பினர், ஜோதிமணி தென்காசி தொகுதி செயலாளர் கணேசன் தேன்காசி நகரச் செயலாளர் ராஜேந்திரன் சுந்தரபாண்டியபுரம் நகர செயலாளர் பாக்கியநாதன் தொகுதிக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கி பேசினர் தொகுதி குழு உறுப்பினர். சிங்காரவேலு நன்றி கூறினார் இதில் திரளான ஆண்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்