எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு சித்தர் புரத்தில் நாடி ராஜேந்திரா சுவாமிகள் நிர்மாணித்த ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.
ராஜேந்திரா சுவாமிகள் ஒன்பதாம் ஆண்டு குரு பூஜை விழாவினை முன்னிட்டு இங்கு ஒன்பது கோள்களுக்கு உலக நன்மைக்காகவும் உலக சமாதானத்திற்காகவும் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. 108 யாக குண்டங்கள் அமைத்து சுவாமி அம்பாள் உட்பட நவக்கிரகங்களை ஆவாகணம் செய்து சிறப்பு ஹோமம் தொடங்கியது.
தொடர்ந்து பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பின்னர் புனித நீரால் 18 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஜப்பான், தைவான் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பொதுமக்கள் 2000 பேருக்கு சேலைகள் உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாடி. செல்வமுத்துகுமரன், செந்தமிழன், மாமல்லன், பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்