வேப்பூர் அக் – 2

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்களிலும் பிடிஓ கொளஞ்சி முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் பற்றாளராக நல்லூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னி முன்னிலையில் ஊராட்சி செயலாளர் தீர்மானங்களை வாசித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் தலைமை தாங்கி வரவு செலவு கணக்கினை சபையில் படித்து காட்டி ஒப்புதல் பெற்றார் கூட்டத்தில் பற்றாளரான நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் வசந்தி, பள்ளி ஆசிரியர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது பற்றாளரான நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளர் சத்தியரங்கன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்

கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வடிகால் வாய்க்கால், குப்பைகளை சுத்தமாக அப்புறபடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது கூட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் பரந்தாமன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் தங்க. சரவணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பற்றாளராக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளர் தினேஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, உதவியாளர் பெரியசாமி, மற்றும் கிராம இளைஞர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒன்றியத்தில் பெரிய கிராமமான இங்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்க தமிழக அரசை வலியுறத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *