அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் வாலாஜா நகரத்தில் உள்ள சமுதாய கூடவலாகத்தில் நடந்தது வாக்காளர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் இ முருகன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ந சிவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஊராட்சி செயலாளர் மு தமிழ்குமரன் தீர்மானங்களை படித்தார் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது கிராம ஊராட்சிகளில் 1/4/2026 முதல் 30/9/2026 முடிய உள்ள காலத்தில் கிராம ஊராட்சியில் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட வரவு செலவு அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது தூய்மை யான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது ஊராட்சி செயலாளர் தமிழ் குமரன் அனைவருக்கும் நன்றி கூறினார்