போதையில்லா உலகம்… தீண்டாமை ஒழிப்பு… இதுவே நம் லட்சியம்…!பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஹாஜி ஜெ. முகமது ரஃபி உறுதிமொழி...!
காந்தி பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வரும் நிலையில், பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் காந்தியடிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக அந்த இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநில இணை செயலாளர் ஜாபர், இளைஞரணி தலைவர் தல்கா, இயக்கத்தின் நிர்வாகிகளான சீனிவாசன்,வழக்கறிஞர் இஸ்மாயில், சிவனேசன், சுலைமான், கவி பாரதி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது காந்தியடிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டதோடு, தீண்டாமை ஒழிப்பு நாட்டின் ஒற்றுமை போதை இல்லா உலகம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர்.இது குறித்து பேசிய ஹாஜி ஜெ. முகமது ரஃபி, நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட காந்தியடிகள் அகிம்சை வழியில் எதையும் சாதிக்கலாம் என்பதனை உணர்த்திச் சென்று இருக்கிறார்.
காந்தியடிகளின் கொள்கையை இளைஞர்கள் உள்வாங்கி அதனை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.நாட்டின் சமூகத்தை பிளவுபடுத்தும் தீண்டாமையை ஒழித்து சகோதரத்துவம் சமத்துவம் மதநல்லிணக்கம் காத்து வாழ வேண்டும்.
நாட்டை வளமான தேசமாக மாற்ற, வருங்கால தலைமுறை மகாத்மா காந்தி உணர்த்தும் கொள்கைகளை பின்பற்றி, நல்வழியிலே இயங்கவும் போதையில்லா உலகம் படைப்பதற்கு துணையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்..