துறையூர் அக்-04
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியில் உள்ள சமுதாயகூடத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் சுமார் 49 தீர்மானங்களை வாசித்தார்.
இதில் ஊராட்சி ஊழியர் கவிதா , விஏஓ புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மின்வாரியம் ராஜேந்திரன், அங்கன்வாடி கனகாம்பாள், தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி,கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஷாலினி,விஏஓ உதவியாளர் ரமாநந்தினி, டிவி கே அருண்குமார், என் ஆர் ஜி எஸ் சுகாசினி, செல்வி, பிரபாவதி மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்