பெரம்பலூரில் 17ம் தேதி காலமுறை ஊதியம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாநில தலைவர் வரதன் தலைமை வகித்தார் நிறுவனர் நல்லப்பன் புலவர் முருகேசன் தணிக்கையாளர் துரைசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில பொதுச்செயலாளர் நேரு கோரிக்கைகளை விளக்கி பேசினார் மாநில பொருளாளர் ராதாகிருஷ்ணன் மாநில இணைச்செயலாளர் சிவா கண்ணன் ஆகியோர் பேசினர்
கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணிவரன் முறை செய்ய வேண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 17ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாநில அளவிலான கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார் முடிவில் மாநில துணைத்தலைவர் மருதராஜ் நன்றி கூறினார் சங்கத்தின் நிறுவனர் அரியலூர் நல்லப்பன் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்