கோவையில் A4 ஃபெர்டிலிட்டி சென்டரின் 25-வது கிளை திறப்பு-அதிநவீன கருத்தரிப்பு சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு முன்னணி கருத்தரிப்பு சிகிச்சை மையமான A4 ஃபெர்டிலிட்டி சென்டரின் 25-வது கிளை கோவை அவினாசி சாலையில் துவங்கப்பட்டது…

இதற்கான துவக்க விழாவில் புதிய மையத்தை திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் மற்றும் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இதுகுறித்து A4 ஃபெர்டிலிட்டி சென்டரின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஷோக் குமார், குளோபல் கிளினிக்கல் இயக்குனரும் இணை நிறுவனருமான டாக்டர் அருணா அஷோக் ஆகியோர் கூறுகையில், கோவையில் தொடங்கப்பட்டுள்ள புதிய மையம், ஒரே இடத்தில் அனைத்து வகையான கருத்தரிப்பு சிகிச்சைகளையும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நவீன IVF, கருவியல் மற்றும் ஆண்களின் கருத்தரிப்பு சிகிச்சைக்கான ஆய்வக வசதிகளுடன், ஒவ்வொரு தம்பதியினரின் தேவைக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

தொடர்ச்சியான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மற்றும் சேலத்திலும் புதிய கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.புதிய மையத்தில் குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு நவீன கருத்தரிப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், லேப்ராஸ்கோப்பி, ஹிஸ்ட்ரோஸ்கோப்பி, நன்கொடையாளர் மற்றும் கரு நன்கொடை திட்டங்கள், கருமுட்டை வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் கருமுட்டை வெளியேற்றத்தைத் தூண்டும் சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு சேவைகளும் இங்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *