தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் உள்ள நகராட்சி பள்ளி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
இந்த பணிகள் தேனி நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ் பார்கவி செல்வி உத்தரவின் பேரில் நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா தலைமையில் சுகாதார அலுவலர் செபாஸ்டின் சுகாதார ஆய்வாளர்கள் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் காலாண்டு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன
நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு பள்ளி வகுப்பறை வாரியாக சுத்தம் செய்யப்பட்டு கொசு தெளிப்பான் மருந்து அடிக்கப்பட்டு பள்ளி முழுவதும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன . தற்பொழுது தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அங்கு கொசு மருந்து தெளிப்பான் மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன
மேலும் பள்ளிகளில் சுகாதார விதிகளை மீறும் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டன. இந்தப் பணிகள் தேனி நகராட்சி பள்ளி மற்றும் தேனி கான்வென்ட் பள்ளிகள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.