தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அப்போது பேசிய அவர் நிச்சயமாக, நியாயத்திற்கு ஒரு வெற்றியும், மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய த.வெ.க-விற்கு ஒரு பாடம் சொல்லித் தரக்கூடிய அளவிற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.
அவர்களுடைய கூட்டணியில் இருக்கக்கூடியவர்களே தவெகவை பற்றி இப்படி விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு, அவர்கள் நேர்மையான, தூய சக்தி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எந்தத் தவறும் செய்யப் போவதில்லை, செய்ய மாட்டோம் என்று தொடர்ந்து பெருமையாக மேடைக்கு மேடை பேசினால் போதாது.
உண்மையிலேயே அப்படி இருக்க வேண்டும். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, பாதுகாப்பு இல்லை, குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் ஒரு அச்சத்தோடேயே வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவித வளர்ச்சிக்கான திட்டங்களும் கிடையாது, தொழில் முதலீடுகள் கிடையாது. இதில் மக்களை ஏமாற்றி, நாங்கள் தூய சக்தி என்று சொல்லி வருகிறார்கள். அதேபோல மக்கள் கிட்ட பணப்பட்டுவாடா செய்வதற்குப் பணம் எங்கிருந்து வருகிறது. இப்படிப்பட்டவர்களுடைய உண்மையான முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தலுக்கே வந்து அதிகமாக பிரச்சாரம் செய்யாத ஒரு முதலமைச்சர், தெருத் தெருவாகப் போய் பிரச்சாரம் செய்திருக்கிறார் என்றால், தம்பி விஜய் அவர்களுக்கு நிச்சயமாக தேர்தலில் ஒரு பயம் இருக்கிறது என்பதுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்றார்.