எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிபாடு உங்கள் பிரியடு எல்லாம் ரொம்ப ரசித்தேன். உங்க சேவைகள் எல்லாம் பாராட்டுக்குரியதாக இருந்தது மறக்கவே முடியாது என ஓய்வு பெற்ற தமிழ் பண்டிட் மூதாட்டி அன்பில் மகேஷ் கரத்தை பற்றி பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்த பெருமான் முதல் தேவார பதிகம் அருளிய மலை கோவிலான இங்கு சிவபெருமான் 3 நிலைகளில் அருள் பாலிக்கிறார். மலைமீது அருள் பாலிக்கும் சட்டநாதரை வழிபடுபவருக்கு சட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். இதனால் வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாத பெருமானுக்கு நடைபெறும் சுக்கிர வார பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு வருகை தந்தார் முன்னாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்ட நாதர், முருகன், திருநிலை நாயகி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து அவருக்கு சிவாச்சாரியார்கள் சுவாமி படங்கள் பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த சீர்காழி தாடாளன் கோவில் என்று அழைக்கப்படும் திரு விக்ரமன் நாராயண பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாலை சேவித்தார். அப்போது
உங்கள் பிரியடு எல்லாம் ரொம்ப ரசித்தேன். உங்க சேவைகள் எல்லாம் பாராட்டுக்குரியதாக இருந்தது மறக்கவே முடியாது என ஓய்வு பெற்ற தமிழ் பண்டிட் மூதாட்டி அன்பில் மகேஷ் கரத்தை பற்றி பாராட்டினார்