​கோவை ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (AI & DS) துறையில் நான்காம் ஆண்டு B.Tech பயின்று வரும் மாணவர் S. அஸ்வின், சர்வதேச அளவில் நடைபெற்ற ‘WorldSkills 2026’ போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கும் கல்லூரிக்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.


​சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த செப்டம்பர் 22 முதல் 27 வரை நடைபெற்ற புகழ்பெற்ற இந்த உலகத்திறன் போட்டியில் (WorldSkills 2026 – Software Testing) இந்தியாவின் சார்பில் அஸ்வின் கலந்து கொண்டார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமையான போட்டியாளர்களுடன் போட்டியிட்டு, சோஃப்ட்வேர் டெஸ்டிங் (Software Testing) துறையில் தனது நுட்பமான திறன், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

​சர்வதேச அளவில் சாதித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர் அஸ்வினை, ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிர்வாகம், முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அஸ்வினின் இந்த சாதனை, மற்ற மாணவர்கள் தொழிற்துறைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கப் பெரும் ஊக்கமாக அமையும் என கல்லூரி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *