திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கிழக்கிந்திய அஞ்சல் அட்டை வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.


திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பிரேம்குமார், ஜலால், சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நிறுவனர் நாசர்கிழக்கிந்திய அஞ்சல் அட்டை வரலாறு குறித்து பேசுகையில்,இன்றைய காலத்தில் கைப்பேசி, இணையம், மின்னஞ்சல் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் சில நொடிகளில் செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் மக்களின் தகவல் தொடர்பில் முக்கிய இடம் பெற்றது அஞ்சல் அட்டை. இந்தியாவில் முறையான அஞ்சல் அமைப்பை பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1764-1766 ஆம் ஆண்டுகளில் பம்பாய், சென்னை மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் தொடங்கியது.

1854-ல் அஞ்சல் அலுவலகச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ஒரே சீரான அஞ்சல் கட்டண முறை நடைமுறைக்கு வந்தது. எனினும், தொடக்க காலத்தில் கடிதங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன, அவை சாதாரண ஏழை மக்களுக்குக் சற்றே செலவுமிக்கதாக இருந்தன.கிழக்கிந்திய அஞ்சல் அட்டையின் அறிமுகமானது,


ஆஸ்திரியா மற்றும் பிரிட்டனில் ஏற்பட்ட அஞ்சல் அட்டைப் புரட்சியைத் தொடர்ந்து, 1879 ஜூலை 1 அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முதலாக அதிகாரப்பூர்வ அஞ்சல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அஞ்சல் அட்டை வெளிர் பழுப்பு நிறத்தில் இருந்தது. இதன் விலை கால் அணாவாக இருந்தது.


அஞ்சல் அட்டைகளின் முகப்புப் பக்கத்தின் மேல் பகுதியில் “East India Post Card” (கிழக்கிந்திய அஞ்சல் அட்டை) என்று அச்சிடப்பட்டிருந்தது. அதன் மையத்தில் பிரிட்டனின் அரச முத்திரையும் (Coat of Arms), வலது மேல் மூலையில் விக்டோரியா மகாராணியின் உருவப்படமும் (Crowned face of Queen Victoria) சிவப்பு-பழுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது.இந்த அஞ்சல் அட்டைகளுக்கான வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் பணிகள் லண்டனில் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டன. குறைந்த விலை அஞ்சல் அட்டைகள் இந்திய மக்களிடையே மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. தகவல்களைச் சுருக்கமாகவும், மிக மலிவான விலையிலும் அனுப்ப முடிந்ததால், வணிகர்களும் சாதாரண பொதுமக்களும் இதனைத் தங்களின் முதன்மைத் தகவல் தொடர்புச் சாதனமாக மாற்றிக்கொண்டனர்.

ஒரு சிறிய அஞ்சல் அட்டைக்குள் அரசியல் வரலாறு, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் தொடர்பு, மொழி, எழுத்து மற்றும் சமூக வாழ்க்கை என பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கியுள்ளன என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *