தூத்துக்குடி மாநகர் பகுதியில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் மாநகரக்குள் கனரா வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய பகுதி பள்ளி குழந்தைகள் செல்லக்கூடிய பகுதிகளில் கனரக வாகனங்கள் தொடர்ந்து வந்து செல்வதாக புகார் கூறப்பட்டதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சுணை முருகன் தலைமையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சண்முகபாலன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து மூன்று நாட்களாக அனுமதி இல்லாத நேரத்தில் மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்வதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு மூன்று நாட்களாக 25க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது

இந்த நிலையில் புதன்கிழமை காலை 9 மணி அளவில் மாநகர் பகுதிக்குள் நான்கு கனராக வாகனங்கள் சென்றதை எடுத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் தலைமையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சண்முகபாலன் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையினர் அனுமதியின்றி வந்த நான்கு கனரக வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்துக் காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு வாகனத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் நான்கு வாகனத்திற்கு 20000 ரூபாய் அபதாரம் தொகை விதிக்கப்பட்டது.

இது பற்றி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் தெரிவிக்கையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் வர அனுமதி இல்லை இதையும் மீறி வரும் வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இதுபோல தொடர்ந்து அதே வாகனங்கள் தொடர்ந்து அனுமதி இல்லாத நேரத்தில் வந்தால் அந்த வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது ஆகையால் அனுமதி இல்லாத நேரத்தில் கனரக வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் செல்லக்கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

தொடர்ந்து இதுபோல கனரக வாகனங்கள் அனுமதி இல்லாத நேரத்தில் மாநகர் பகுதிக்குள் வந்தால் தொடர்ந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் தெரிவித்தார். அபதாரதொகை செலுத்திய பின்பு வாகனங்களை விடுவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *