ஆரோக்கியமான குழந்தைகள், வளமான குடும்பங்கள், வலிமையான சமுதாயம் என்பது குறித்து 9-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2026, நாடு முழுவதும் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள
‘நமது அங்கன்வாடி, நமது பொறுப்பு’ என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டு பேரணியாக செல்ல இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் கொடியாசைத்து துவக்கி வைத்ததன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
உணவுப் பன்முகத்தன்மை மற்றும் போதுமான புரதச்சத்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சத்தான, பல்வேறு வகையான உணவுகளை வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.