திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மலேசியாவில் மாநில லச்சினை மற்றும் ஆட்சியாளர்கள் படத்துடன் வெளிவரும் அஞ்சல் தலை வரலாறு
குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.


திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.நிறுவனர் நாசர்,பொருளாளர் தாமோதரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பிரேம்குமார், ஜலால், சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் லால்குடி விஜயகுமார் மலேசியாவில் மாநில லச்சினை மற்றும் ஆட்சியாளர்கள் படத்துடன் வெளிவரும்
அஞ்சல் தலை குறித்து பேசுகையில், மலேசியாவின் அஞ்சல் துறை வரலாற்றில் 1979 ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்ட ‘மலர் அஞ்சல் தலைத் தொடர்’ மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் இயற்கை வளங்களையும் தாவர இனங்களையும் உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது.

இதில் 5-சென்ட் (5 sen) மதிப்புள்ள அஞ்சல் தலையில் ‘லேகர்ஸ்ட்ரோமியா ஸ்பெசியோசா’ என்ற மலர் இடம்பெற்றிருந்தது. இந்த மலர் தமிழில் பூமருது அல்லது கவளை என்றும், ஆங்கிலத்தில் ‘ஜெய்ண்ட் கிராப்-மைர்டில்’ அல்லது ‘பனாபா’ என்றும் அழைக்கப்படுகிறது.இந்த 5-சென்ட் அஞ்சல் தலை மிகவும் நேர்த்தியான பலவண்ண ஆஃப்செட் அச்சு முறையில் வடிவமைக்கப்பட்டது.

இதன் அளவு 35 x 25 மிமீ ஆகும். இதில் ‘POS’ என்ற எழுத்துக்கள் கொண்ட எண்கோண நீர்மார்க்கு பயன்படுத்தப்பட்டது. அஞ்சல் தலையின் மையப்பகுதியில் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் கலந்த பூமருது மலரின் அழகான படம் அச்சிடப்பட்டிருந்தது.


மலேசியாவின் அஞ்சல் தலை வரலாற்றில் ஒரு தனித்துவமான அம்சம் உண்டு. மலேசியாவின் பொதுவான அஞ்சல் தலைகளில், அந்தந்த மாநிலங்களின் சுல்தான்கள் அல்லது ஆளுநர்களின் உருவப்படங்கள் மற்றும் மாநில முத்திரைகளுடன் தனித்தனியாகவும் இந்த முத்திரைகள் வெளியிடப்பட்டன. 1979 மலர் தொடரில், 5-சென்ட் பூமருது மலர் அஞ்சல் தலை மலேசியாவின் பல்வேறு மாநிலங்களுக்காக வெளியிடப்பட்டது.

அவற்றில் சில முக்கிய மாநிலங்கள் ஜொகூர்,பினாங்கு,பேராக், கெடா, பெர்லிஸ்,மலாக்கா, நெகிரி செம்பிலான்,சபா,கோலாலம்பூர் உள்ளடக்கிய கூட்டாட்சிப் பகுதி என ஒவ்வொரு மாநில பதிப்பிலும் மலரின் படம் ஒன்றாகவே இருந்தாலும், மேல் பகுதியில் அந்தந்த மாநிலத்தின் சின்னமோ அல்லது சுல்தானின் உருவமோ அச்சிடப்பட்டிருக்கும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *