தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புதியதாக ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக ஏழாவது வாரத்துக்கு உட்பட்ட லூர்தம்மாள் புறம் சென்மேரிஸ் காலனி மாநகராட்சி பூங்காவிற்கு அருகில்அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது
அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று மேயர் ஜெகன் பார்வையிட்டார் அப்போது அங்கு வந்து இருந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் இடத்தை காண்பித்து விபரங்களை கேட்டு எறிந்தனர். மேயர் ஜெகன் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை உடனடியாக வழங்கும் மாறும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக அறிக்கை தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் உடனடியாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரேசன் கடை புதியதாக உடனடியாக கட்ட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து சென்மேரிஸ் காலனியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பார்வையிட்டார் அப்போது அங்கு என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் சிறுவர்களுக்கான விளையாட்டு அதுபோல சிலம்பம். கைப்பந்து. உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகளை உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் திறவிட்டார்
அதுபோல பூங்காவில் அமைக்கப்படுகின்ற மின் விளக்குகள் இரவை பகலாக்கும் வகையில் அமைத்திருக்க வேண்டும். இது பற்றி மேயர் ஜெகன் கூறுகையில் வடக்கு மண்டல பகுதியில் ஏற்கனவே அறிவியல் பூங்கா உள்ளது அதன் பிறகு இந்த சென்மேரிஸ் காலனி லூர்தம்மாள் புரத்தில் தான் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது இந்த பூங்கா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் இந்த பூங்காவில் அமைக்கப்பட உள்ளது
உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட விளையாட்டு இந்த பூங்காவில் அமைக்கப்படுகிறது அதுபோல எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதனால் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தவுடன் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மேயர் ஜெகன் தெரிவித்தார்.
பல வருடங்களாக வடக்கு மண்டல பகுதியில் எந்த ஒரு பூங்காவும் இல்லாமல் இருந்தது அறிவியல் பூங்கா மற்றும் அதன் பிறகு அமைக்கப்பட்டது மற்றபடி எந்த ஒரு பூங்காவும் இல்லை எங்கள் பகுதியில் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மேயர் ஜெகன் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா இங்கு அமைக்கப்பட்டு வருகிறது
விரைவில் உங்க மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிய வருகிறது. உடன் கூட்டுறவு துறை அதிகாரி அந்தோணி பட்டுராஜ். மாநகராட்சி அதிகாரிகள் முனிர் அகமது. முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன். பகுதிச் செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல் ராஜ். மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்சலின். திமுக பிரதிநிதி பிரபாகர்உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்