தென் மண்டல காவல்துறை மூத்த காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி – மதுரை மாவட்டம் சார்பில் 12 மற்றும் 13,ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் கடவூர் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற காவல் அதிகாரிகளின் துப்பாக்கிச் சுடும் திறன், குறி தவறாத துல்லியம் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.


மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் அபினவ்குமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்
பாளர் தேவநாதன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, காவல் சிறப்புப்படை ஆறாம் அணி, மதுரை, தளவாய் மது குமாரி, மற்றும் மதுரை மாநகர ஆயுதப்படை துணை ஆணையர் பிரபாகர் ஆகியோர் உட்பட 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 14 உதவி கண்காணிப்பாளர்கள் / துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் இப்போட்டியில் கலந்து
கொண்டனர்.


போட்டிகளின் முடிவுகள் :

  1. 9 மி.மீ. பிஸ்டல் / .380 ரிவால்வர் பிரிவில்
    முதல் பரிசு: அனில் குமார், துணைக்காவல் கண்காணிப்பாளர், சிவகாசி உட்கோட்டம், விருதுநகர் மாவட்டம்.
  • இரண்டாம் பரிசு: அபிஷேக் குப்தா, காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம்.
  • மூன்றாம் பரிசு: கார்த்திக், துணைக்காவல் கண்காணிப்
    பாளர், திண்டுக்கல் உட்கோட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
  1. 5.56 மி.மீ. INSAS துப்பாக்கிப் பிரிவில்
  • முதல் பரிசு: விஷ்ணு பிரியா, துணைக் காவல் கண்காணிப்பாளர், ஆண்டிபட்டி உட்கோட்டம், தேனி மாவட்டம்.இரண்டாம் பரிசு: கார்த்திக், துணைக்காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல் உட்கோட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

  • மூன்றாம் பரிசு: அபிஷேக் குப்தா, காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்டம். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் முதல் பரிசு: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா,இரண்டாம் பரிசு விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர்அனில் குமார்,மூன்றாம் பரிசு , திண்டுக்கல் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்,கார்த்திக் ஆகியோர் இப்போட்டிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற காவல் அதிகாரி களைப் பாராட்டும் வகையில்,தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி, வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *