செங்குன்றம் செய்தியாளர்
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான இடங்களில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து தினமும் மாலையில் அதற்கு பூஜைகள் செய்து அனைவரும் அம்மனின் அருளை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர் அருகிலுள்ள வெள்ளாளர் தெருவில் அருணாதேவி என்பவர் வீட்டில் கொலு பொம்மைகளை வைத்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்து, அதனை பார்க்க வரும் அன்பர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி பரிசு பொருள்கள் வழங்கி உபசரித்து வருகிறார்.இதனைக் காண தினமும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் திரளாக கலந்து கொண்டு கொலு பொம்மைகளின் அழகை ரசித்து அம்மனை வழிபட்டு வருகின்றார்கள்.