கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இயங்கி வரும் இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளைக்கு உட்பட்ட ஆதிசக்தி சித்தர் ஞானபீடத்தில் நவராத்திரி பெருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

நமது பாரம்பரிய பண்பாட்டை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக அகண்ட தீபம் ஏற்றுதல் மற்றும் பிரம்மாண்ட கொலு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்கு ஆதிசக்தி சித்தர் ஞானபீட நிறுவனரும், ஆசீவகத் தமிழ் சித்தருமான தவத்திரு கண்ணன் அடிகளார் தலைமை தாங்கினார். அவர் தலைமையில் ஆதிசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அணையா தீபமாக அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

ஞானபீட வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பல்வேறு தெய்வ உருவங்கள், சித்தர்கள், தமிழர் பண்பாட்டை விளக்கும் பொம்மைகள் கொண்டு கொலு அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கொலுவை கண்டு ரசித்து, அம்மன் அருள் பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கண்ணன் அடிகளார் திருநீறு பிரசாதம் வழங்கி ஆசி வழங்கினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் அபிராமி செந்தில் கலந்து கொண்டு விநாயகர் துதி, அம்மன் பாடல்கள், முருகன் பாடல்கள் உள்ளிட்ட பல பக்தி பாடல்களை பாடி பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார். பக்தர்கள் பாடல்களுக்கு ஏற்ப பக்தியுடன் பாடி மகிழ்ந்தனர்.

விழாவின் நிறைவாக கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை
திருமதி மகாலட்சுமி கண்ணன் அடிகளார், தலைவர் திருமதி சங்கீதா, திருமதி ஹேமலதா மற்றும் ஆதிசக்தி சித்தர் ஞானபீடத் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *