கரூர்: கரூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு அமைச்சர் விஜயலஷ்மி சின்னசாமி சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

கரூர் ஸ்ரீ வி.ஆர்.எஸ். மஹாலில், மாவட்ட கலெக்டர் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் விஜயலஷ்மி சின்னசாமி கலந்து கொண்டு, கரூர் மற்றும் தாந்தோணி வட்டாரங்களைச் சேர்ந்த 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு பட்டுப்புடவை, வெள்ளித் தாம்பூலத் தட்டு, ஆவின் நெய், பாதாம் பவுடர், பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 வகையான கலவை சாதங்களைப் பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

அப்போது பேசிய அமைச்சர், தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகத்தான நிகழ்வு என்றும், கர்ப்பிணிப் பெண்கள் சத்தான உணவுகளை உட்கொண்டு, நல்ல சிந்தனைகளுடன் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.8.40 லட்சம் மதிப்பில், தசை சிதைவு, பக்கவாதம் மற்றும் முதுகுத்தண்டுவட பாதிப்பால் பாதிக்கப்பட்ட 8 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ், சார் ஆட்சியர் ரா.வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *