தாராபுரம் செய்திகளை பிரபுசெல்:9715328420

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காவல் நிலையம் அருகே, தயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தலைமையில் இன்று எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 2017 குறித்தும், எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல், மருத்துவச் சேவைகளில் சமத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பாகுபாடு காட்டுவதைத் தடுத்தல் உள்ளிட்ட சட்டப் பாதுகாப்புகள் குறித்து விளக்கப்பட்டது.எச்.ஐ.வி. தொற்று குறித்த தவறான புரிதல்களைத் தவிர்த்தல், உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெறுதல், தொற்றுடன் வாழ்பவர்களைப் புறக்கணிக்காமல் அவர்களின் உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *