துறையூர் அக்-14
திருச்சி மாவட்டம் துறையூரில் விஸ்மோனி 370 வது புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம் உள்ள சாய் பார்த்தி டவரில் முதல் மாடியில் விஸ்மோனி 370 வது புதிய கிளை திறப்பு விழா 14-10-2026 அன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தெற்கு மண்டல தலைவர் எஸ் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நிர்வாக அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.இதில் திருச்சி மண்டல தலைவர் எல் பாலகிருஷ்ணன், கிளை தலைவர் பி வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் தலைமை இடத்தைக் கொண்ட உலகளாவிய ஃபின்டெக் தலைவரான விஸ் பைனான்சியலின் ஒரு பகுதியாக விஸ்மோனி தனது 370 வது புதிய கிளையை துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள சாய் பார்த்தி டவரில் முதல் மாடியில் புதிய கிளையை ஆரம்பித்து உள்ளது.
விஸ்மோனியில் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிஏ கிருஷ்ணன் கூறுகையில் துறையூரில் ஆரம்பிக்கப்பட்ட கிளையில் தங்க நகை கடன்கள், அன்னிய செலாவணி, உலகளாவிய பண பரிமாற்றங்கள், வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.
இதனால் நகரம் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் தகவல்களுக்கு www wizzmoni.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது 1800 102 0555 என்ற டோல் ஃப்ரீ எண் அல்லது customercare@wizzmoni.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்