வேப்பூர் அக் -14

கடலூர் மாவட்டம், நல்லூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நல்லூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எருமனூர் விஜய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, அவர்களின் தாய்மை சிறப்பாக அமைய வாழ்த்துகள் தெரிவித்தார்

அவருடன் தவெக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர் வேப்பூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைத் தொகுப்புப் பைகளை ரோட்டரி தலைவர் களத்தூர் ராமலிங்கம் வழங்கினார்.

விழாவில் ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ஜனனி தாஸ், முன்னாள் தலைவர் ஆனந்தன், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராம்குமார், மருத்துவர் சீனிவாசன், மணிகண்டன், பாஸ்கர், மும்மூர்த்தி, நாகராஜன், சூர்யா கட்டிமுத்து, தங்கப்பிரகாஷ், ஆனந்தன், வாசுதேவன், ராஜி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக மேற்பார்வையாளர்கள் தமிழரசி, பாரதி, ஜோதி, அந்தோணி அம்மாள், இளநிலை உதவியாளர் விநாயகம், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *