புவனகிரி அக்டோபர் -14
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பு.கொளக்குடி ஊராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் அருகில், குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் சுவிட்ச் போர்டு மிகவும் ஆபத்தான முறையில் திறந்த நிலையில், வெறும் சாக்கு பைகளால் மூடப்பட்டு, மரக்கட்டையில் தொங்கவிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், தாழ்வான இடத்தில் உள்ள இந்த மின் இணைப்பு தண்ணீரில் நனைந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சிறு குழந்தைகள், பொதுமக்கள் தொடும் தூரத்தில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.