வேப்பூர் நவ-4
கடலூர் மாவட்ட அளவிலான கபாடி போட்டிக்கு வேப்பூர் வட்டம் நல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் தேர்தெடுக்கபட்டார் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாவட்ட அளவிலான சப் ஜூனியர் கபாடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
இத்தேர்வில் வேப்பூர் அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவரான நகர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் சுகந்தி தம்பதிகளின் மகன் சுந்தர் கலந்து கொண்டு விளையாடினார் அவரது சிறப்பான கபாடி ஆட்டத்தை கண்ட மாவட்ட விளையாட்டு குழு சுந்தரை சப் ஜூனியர் லெவல் கபாடி போட்டிக்கு தேர்வு செய்தனர்
மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கபட்ட மாணவர் சுந்தரை நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இறை வணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம், உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன் வகுப்பு ஆசிரியர் தனசேகரன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர் அதனை தொடர்ந்து மாணவர் பயிற்சி பெறும் நகர் பீமாராவ் கபாடி குழு பயிற்சியாளர் லியோ மற்றும் சக கபாடி வீரார்கள் மாணவர் சுந்தரை பாராட்டினார்கள்