திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் ஜமாலியா தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில், கூத்தாநல்லூர் பகுதி கிளைகள் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் வேம்பு, புங்கை, புளியமரம், வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பது மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மரங்களை வளர்ப்பதன் அவசியத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பையும் வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மரக்கன்று நடும் விழா பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ராஜாராம், நகராட்சி ஆணையர் சிவரஞ்சனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் அப்துல் காதர், மாவட்டத் துணைத் தலைவர் பீர் முஹம்மது, மாவட்டப் பொருளாளர் சதக்கத்துல்லா ரஹ்மானி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபீர் அஹமது மற்றும் கூத்தாநல்லூர் பகுதி ஒருங்கிணைந்த கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *