கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் 37-வது மருத்துவமனை தின விழா, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்..

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் மூத்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.கே. பெரியசாமி, நானா நானி முதியோர் இல்லத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் என். பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நோயாளிகள் மருத்துவமனையின் சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட பி.எஸ்.ஜி. நோயாளிகள் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் மருத்துவச் சேவைகளை தொழில்நுட்ப வசதிகளுடன் மேலும் எளிமைப்படுத்தும் முயற்சியில் மருத்துவமனை அடுத்தகட்ட முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன் தெரிவித்தார்…

தொடர்ந்து, மருத்துவமனையின் வளர்ச்சிக்கும் சிறப்பான மருத்துவச் சேவைக்கும் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனைப் பணியாளர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் நிறைவாக, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஆர். கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.

37 ஆண்டுகளாக மருத்துவச் சேவையில் தொடர்ந்து பயணித்து வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் சாதனைகள், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நோயாளிகள் நலனில் மருத்துவமனை கொண்டுள்ள அக்கறையை எடுத்துரைக்கும் வகையில் விழா அமைந்தது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *