பேராவூரணி நவ-17
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தனியார் திருமண மண்டபத்தில் பேட் தொண்டு நிறுவனம் . மற்றும் சென்னை ஆஸ்திரேலியா துணை தூதரகம் இணைந்து நிதி கல்வியறிவு மூலம் பெண்கள் முன்னேற்றம் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் திட்ட மேலாளர் அக்ரம். மண்டல மேலாளர் செந்தில். அருண்குமார் . ஆகியோர்கள் கலந்து கொண்டு நிதி . கல்வியறிவு குறித்து விழிப்புணர்வு பற்றி பேசினார். இந்த விழிப்புணர்வு ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கு பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
வாழ்வின் பல்வேறு நிலைகள். அதன் நிதி தேவைகள். நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல். வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள். மோசடிகளிடமிருந்து பாதுகாப்பு . மற்றும் அதன் முக்கியத்துவம். காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள். முதலீடுகள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் குறித்து பெண்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
பேராவூரணி
த.நீலகண்டன்