நவம்பர் 20 முதல் டிசம்பர் 6 வரை நடைபெறும் பிரம்மாண்ட வைர நகைக் கண்காட்சி – ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு இலவச தங்க நாணயம்!
ஈரோடு, நவம்பர் 20: உலகப் புகழ்பெற்ற நகை நிறுவனமான ஜோய்ஆலுக்காஸ், ஈரோடு வாடிக்கையாளர்களுக்காக ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவெல்லரி ஷோ’ என்ற பிரம்மாண்ட வைர நகைக் கண்காட்சியை தனது ஈரோடு ஷோரூமில் இன்று (நவம்பர் 20) தொடங்கியுள்ளது. டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சி, வைர நகைகளின் தனித்துவமான வடிவமைப்பு, நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் நவீன அழகியலை ஒருங்கே கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
மணமகளுக்கான பிரம்மாண்டமான வைர நகைத் தொகுப்புகள் முதல், அன்றாடம் அணிவதற்கு ஏற்ற நவீன மற்றும் அழகிய டிசைன்கள் வரை ஏராளமான பிரத்யேக வைர நகைகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பாரம்பரியத்தின் அழகையும், நவீன காலத்தின் ரசனையையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நகையும் தனித்துவமான கலைப்படைப்பாகத் திகழ்கிறது. குறிப்பிட்ட கண்காட்சி காலத்தில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேக டிசைன்களும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
இதுகுறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய்ஆலுக்காஸ் கூறுகையில், “பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவெல்லரி ஷோ என்பது வைரங்களின் மீதான எங்களது பேரார்வத்தையும், நகை வடிவமைப்பில் மிகச்சிறந்த தரத்தையும் நேர்த்தியையும் வழங்குவதில் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். ஈரோடு எங்கள் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. திருவிழாக் காலத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தக் கண்காட்சி, அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் பிரத்யேக வைர நகை வடிவமைப்புகளைக் கண்டறிய வாடிக்கையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமையும்” என்றார்.
மேலும், இக்கண்காட்சியை முன்னிட்டு சிறப்புச் சலுகையாக, கண்காட்சி நடைபெறும் காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்பிலான வைர நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை வாடிக்கையாளர்களின் நகை வாங்கும் அனுபவத்தை மேலும் மகிழ்ச்சியானதாக மாற்றும்.
டிசம்பர் 6-ம் தேதி வரை ஈரோடு ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் நடைபெறும் இந்தப் பிரத்தியேக வைர நகைக் கண்காட்சியைப் பார்வையிட்டு, காலத்தால் அழியாத அழகையும் நவீன வடிவமைப்புகளையும் கொண்ட வைர நகைகளைத் தேர்வு செய்ய அனைத்து வாடிக்கையாளர்களையும் ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் அன்புடன் அழைக்கிறது.