மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு

காயல்பட்டினம், நவ. 20:

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளராக ஜீவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதிமுறைகளின்படியும், எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், மாநில பொதுச்செயலாளர் ஷாஜகானின் பரிந்துரையை ஏற்று, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், புழல் பகுதி, சிவ விஷ்ணு நகரைச் சேர்ந்த ஜீவா என்பவர் 20.11.2026 முதல் கட்சியின் மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில பொருளாளர் ஜீவா, கட்சியின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட வேண்டும். மேலும், தனது பதவியின் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து, இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு, அனைத்து சமூக மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

எனவே, மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவாவுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவரது மக்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *