தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி மல்லாபுரம்:
சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹஜ்ரத் காதர் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் உரூஸ் விழா 20.11.2026 வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மாலை 5 மணியளவில் ஜனாப் E. சையத் முத்துவல்லி மற்றும் T.K. குடும்பத்தினர் தலைமையில் சந்தனக்கூடு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்ரிப் தொழுகைக்குப் பிறகு பாத்திஹா மற்றும் ஜியாபத் (அன்னதான விருந்து) சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஹஜ்ரத் காதர் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் ஆசியைப் பெற்றுச் சென்றனர்.
சமூக நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழா அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சுன்னத் ஜமாஅத் நிர்வாகத்தினர், விழாக் குழுவினர் மற்றும் கிரீன் ஸ்டார் பாய்ஸ் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் உரூஸ் விழா இனிதே நிறைவடைந்தது.