திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில், இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாடு மற்றும் வசதி அலுவலகம் (MSME-DFO), சென்னை சார்பில், கற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆறு வார தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி (ESDP) நடைபெற்றது. இப்பயிற்சியின் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் 26 பயனாளிகள் பங்கேற்றுப் பயிற்சியை நிறைவு செய்தனர். பயிற்சியின் போது கோரைப்புல், சணல், காகிதப் பொருட்கள் தயாரித்தல், கைகளால் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் சகதாரா நாப்கின் தயாரித்தல், குரோஷே (Crochet) பொருட்கள் தயாரித்தல் மற்றும் பாக்குமட்டைத் தட்டு தயாரிப்புக்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல் ஆகிய செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


மேலும், தொழில்முனைவோர் ஊக்கம், தலைமையத்துவத் திறன், திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைப்படுத்துதல், அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. MSME-DFO சென்னை உதவி இயக்குநர் மஞ்ஜி சாகர் வாழ்த்துரை வழங்கி, பயிற்சியை நிறைவு செய்த 26 பயனாளிகளுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
கல்லூரியின் தலைவர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினருமான மு.ரமணன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ருக்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.முனைவர் வி.வான்மதிசெல்வி, துறைத் தலைவர் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *