‘அமரன்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கோவையில் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா ஸ்டார் மம்முட்டி தமிழில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு அதிகாலை 6 மணி முதல் முதல் காட்சியைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாலையிலேயே கோவை போத்தனூரில் உள்ள அரசன் திரையரங்கம் முன்பாக தனுஷ் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர்.

குறிப்பாக, அண்மையில் நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்திய புதிய கொடியை ஏந்தியபடி தனுஷ் நற்பணி இயக்கத்தினர் திரையரங்கிற்கு வந்திருந்தது கவனம் ஈர்த்தது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் திரைப்பட வெளியீட்டை உற்சாகமாகக் கொண்டாடினர்.

கோவை தெற்கு மாவட்ட தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் செயலாளர் சரவணன், பொருளாளர் மலர்வேல், கவுரவத் தலைவர் தர்மராஜ், துணைச் செயலாளர் சாந்தகுமார், துணைத் தலைவர் அருண் மற்றும் மகளிர் அணி, பகுதி, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *