சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக வெற்றிக் கழக கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி நவ.19 அன்று காலமானார்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருமருகலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார்.

மத்திய ஒன்றிய செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வி.எஸ்.பாபு உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக திருமருகல் முடிகொண்டான் ஆற்று பாலத்தில் இருந்து மெயின் ரோடு வழியாக பஸ் நிலையம் வரை வி.எஸ்.பாபுவின் உருவ படத்துடன் அமைதி ஊர்வலம் வந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *