விருதுநகர் மாவட்டம், சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செயல்பட்டு வரும் கம்மவார் பிரைமரி நர்சரி பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவர் அறம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன், தலைவர் திருவேங்கடசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி, கே.எம்.டி. பள்ளியின் தாளாளர் ராஜேஷ் பெருமாள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பில் மாணவ, மாணவிகள் தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மாணவர்களின் நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை சிறப்பு விருந்தினர்களும், நிர்வாகிகளும், பெற்றோர்களும் கண்டு ரசித்துப் பாராட்டினர்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் கலைத்திறன், தனித்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இவ்வாண்டு விழா அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *