S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
காரைக்கால், நவ.28 –
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், வரும் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயராணி, குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி, ஒருங்கிணைந்த பிராந்திய மைய இயக்குனர் ரேவதி, எஸ்எஸ்ஏ உதவி மாவட்ட திட்ட அதிகாரி வனிதா, மாவட்ட ஆட்சியரின் செயலர் வித்யாதரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன், சமூக நலத்துறை உதவி இயக்குனர் சுந்தரம் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இந்த போட்டிகளில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.