காரைக்கால் வங்கக் கடலில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக காரைக்காலில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்வதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மேல ஒடுதுறை, தருமபுரம், புதுத்துறை, D.K.நகர், லயன் கரை மற்றும் பல்வேறு பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் இரவும் பகலும் பாராமல் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.